குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், புகார்கள் அல்ல என தெளிவுபடுத்திய சென்னை உயர்நீதிமன்றம், இதில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்ப கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில், பாதுகாப்பு மீறல் மட்டும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் உரிமையியல் சம்பந்தப்பட்டது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறி, இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.