பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரால் சென்னையில் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதையடுத்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங் களில் கூட்டம் அலை மோதியது. இந்த முறை முன் பதிவு செய்தோருக்கு மட்டுமே பயணிக்க அனுமதி என்பதால் அனைத்து ரயில்களும் நிரம்பி உள்ளன.
சென்னை ரெயில் நிலையங்களில் இருந்து 2 நாட்களிலும் 1 லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் சொந்த ஊருக்கு சென்றனர். அதேபோல் மேலும் 1 லட்சம் பேர் ரெயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.