சென்னை - விருகம்பாக்கத்தில் சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்களிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்குள்ள இளங்கோ நகர் முதல் தெருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பியுள்ளான்.
இதேபோல தாயாருடன் வீதியில் நடந்து சென்ற பல் மருத்துவமனையின் பெண் உதவியாளர் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியையுடன் தவறாக நடந்துள்ளான். சிசிடிவிகள் மூலம் அவனை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.