பொங்கலை முன்னிட்டு சென்னையின் 6 இடங்களில் இருந்து தமிழகம், ஆந்திரா, புதுச்சேரிக்கு இன்றும், நாளையும் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பெருநகர போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கும், மாதவரம் புதிய பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆந்திராவுக்கும் பேருந்துகள் இயக்கபட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பூந்தமல்லி மாநகராட்சி பேருந்து நிலையம், தாம்பரம் சானிட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், கே.கே. நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து பணிமனை ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துதுறை கூறியுள்ளது.