பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரேநாளில் 1லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடச் செல்பவர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்துகள், இவற்றுடன் 485 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2 ஆயிரத்து 535 பேருந்துகள் மூலம் நேற்று நள்ளிரவு வரை 1லட்சத்து 11ஆயிரத்து 673 பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.