ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் 401 மின்சார ரெயில் சேவை மட்டும் சென்னையில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரடங்கிற்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 660 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இனி மேல் வரும் நாட்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 401 சேவைகள் மட்டுமே இயக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. இதே அட்டவணை, அனைத்து தேசிய விடுமுறை நாட்களிலும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.