சென்னை பல்லாவரம் அருகேவுள்ள பொத்தேரி ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அந்த ஏரியை சுற்றிலும் ஒரு வாரத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நகராட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த 30ம் தேதி இரவு ஏரியில் 10 லாரிகளில் குப்பைகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசுக்கும், நகராட்சிக்கும் அப்பகுதி மக்கள் புகாரளித்த நிலையில், நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து அது கொட்டப்பட்டிருக்கலாம் என கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க ஏரியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக நகராட்சி ஆணையர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.