நீதிபதி கலையரசன் ஆணையத்திடம் விசாரணைக்குச் செல்லும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக நிதியில் முறைகேடு என்றும், பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நீதிபதி கலையரசன் ஆணையம் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தர மறுப்பதாக ஆணையம் கூறுவதால் பல்கலைக்கழகத்தின் மதிப்புக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விசாரணைக்குச் செல்லும் ஆசிரியர்கள், அதிகாரிகளைக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும், அதை அரசும் ஆணையமும் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.