சென்னை எம்.ஆர்.சி. நகரிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் 97 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, சென்னையிலுள்ள அனைத்து நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், எம்.ஆர்.சி. நகரிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் பணிபுரியும் 232 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.