முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றி உயிரிழந்த மூவருக்கு பிரபல பிளைவுட் நிறுவனமான ஷரோன் பிளைவுட் நிறுவனம் சார்பில் “ஐயம் ஸ்ட்ராங்கஸ்ட்” விருது வழங்கப்பட்டுள்ளது.
சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நபர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்த “ஐயம் ஸ்ட்ராங்கஸ்ட்” விருதை ஷரோன் பிளைவுட் நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முதல் மருத்துவரான சைமன் ஹெர்குலஸ் என்பவருக்கும் முதல் செவிலியரான ஜோன் மேரி பிரிசில்லா என்பவருக்கும் முதல் காவல் ஆய்வாளர் பாலமுரளி என்பவருக்கும் கடந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.
மூவரின் சார்பில் அவர்களின் குடும்பத்தாரிடம் விருதுகள் கொடுக்கப்பட்டு தலா 51 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.