மெரினா கடற்கரையில், 900 தள்ளுவண்டி கடைகளுக்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 900 கடைகளில் 60 சதவீத கடைகள், ஏற்கனவே மெரினாவில் வியாபாரம் செய்து வந்தவர்களுக்கும், மீதமுள்ள 40 சதவீத கடைகளை, மற்றவர்களுக்கு ஒதுக்கவும் வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவுபடி, சென்னை மாநகராட்சி அறிவிப்பாணை வெளியிட்டது.
இதற்கு தடை கோரி மெரினாவில் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற 8ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.