தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுபான விடுதிகளை 31 ஆம் தேதி இரவு இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து விதமான உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை உட்பட கடற்கரை முற்றிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவற்றை கண்காணிக்கவும், பாதுகாப்பு வழங்கவும் சென்னை மாநகர் முழுவதும் புத்தாண்டு அன்று இரவு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு, 300 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என கூறியுள்ளனர்.