சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில், 40 ஆண்டுகாலம் தனது இசைப்பணிக்கு பயன்பட்ட இசைக்கூடத்தில் இன்று ஒரு நாள் தியானத்தில் ஈடுபட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இளையராஜா அங்கு வரவில்லை.
அவரது வருகையை எதிர்நோக்கி காலை 9 மணி முதலே ஊடகங்கள காத்திருந்த நிலையில், மன அழுத்தத்தில் இருப்பதால் பிரசாத் ஸ்டுடியோ வர இளையராஜாவுக்கு விருப்பமில்லை என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இளையராஜாவின் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ரமண மகரிஷியின் படம் அகற்றப்பட்டதாலும், அறையின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாலும் இளையராஜா மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அவர் வராவிட்டாலும், அவருக்கு சொந்தமான பொருட்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் நவீன் குமார் மூர்த்தி தெரிவித்துள்ளார்.