ஆவணங்கள் இன்றி, உடனடி கடன் என்ற விளம்பரத்துடன் கூடிய லோன் மற்றும் பைனான்சியல் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று, பொதுமக்களுக்கு, சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் செயலிகள், ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்படவில்லை என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல Loan App-கள் உபயோகிப்பாளரின் செல்போன் தகவல்களை திருடி, தனித மனித உரிமையை மீறுவதாக, காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.இத்தகைய, செயலிகளை, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதார் அல்லது வங்கி விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், போலீசார் எச்சரித்துள்ளனர்.
Loan App பெயரில், தங்களை யாராவது அச்சுறுத்தினால்,உடனடியாக போலீசில் புகார் அளிக்குமாறு, சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.