கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வின் போது, நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வாகிய விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டார். இந்த விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஆதிநாதன் ஆணையத்திற்கும் அறிவுறுத்தினார்.