சென்னையில் 5 டாஸ்மாக் எலைட் கடைகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.
சென்னையில் அமைந்துள்ள முக்கிய வணிக வளாகங்களான வேளச்சேரி பீனிக்ஸ் மால், ஸ்கை வாக், அல்சா மால் போன்ற மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு சோதனை நடத்தப்பட்டது.
அயனாவரம் மற்றும் வேளச்சேரியில் அமைந்துள்ள எலைட் கடைகளிலும் சோதனை காலை வரை நீடித்தது. பீர் மற்றும் மதுபான விற்பனையில் 20 ரூபாய் முதல் 40 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.