திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கள்ளிக்குப்பம் பகுதியிலுள்ள மைதானம் ஒன்றில் ஓட்டப்பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் 8 பேர், பயிற்சியை முடித்துவிட்டு திரும்பும் போது புழல் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்பராத விதமாக 3 இளைஞர்கள் மட்டும் ஆழப்பகுதியில் சிக்கிக் கொண்டதால் கரை திரும்ப முடியவில்லை. மற்ற இளைஞர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞர்கள் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.