சென்னையில் சொகுசு கார்கள் வாங்குவதற்கு வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து கடன் வாங்கி மோசடி செய்த கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட வங்கி மேலாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக, ஏற்கனவே பிரபல கார் பந்தய வீரர் விஜய் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் கார்ப்பரேஷன் வங்கி மேலாளராக இருந்த வெங்கட்ராமன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
2013-ம் ஆண்டிலிருந்து பல வங்கிகளில் பணியாற்றி மோசடிக்கு துணை போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கார்ப்பரேஷன் வங்கி யூனியன் வங்கியுடன் இணைக்கப்பட்ட நிலையில், வெங்கட்ராமன் திருச்சி மண்டலத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த விவகாரத்தில் வங்கி மேல் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்