சென்னை அருகே உள்ள இரு சுங்கச்சாவடிகளில் ஜனவரி 18 வரை 50 விழுக்காடு சுங்கக் கட்டணமே பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையை முறையாகப் பராமரிக்காததால் தானாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், சாலையைச் சீரமைக்கும் வரை 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவிகித கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது. வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான தேசிய நெடுஞ்சாலை ஆணைய வழக்கறிஞர், சாலை சீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீரமைப்புப் பணிகள் தரக்குறைவாக இருப்பதால், இரு சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணமே பெற வேண்டும் என்ற உத்தரவை ஜனவரி 18 வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.