அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி நாளை நேரில் ஆஜராக வேண்டும் எனக் கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதியில் 200 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், பணிநியமனத்துக்கு 80 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் துணைவேந்தர் சுரப்பா மீது புகார் வந்ததால் அது பற்றி விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
புகாரில் உண்மையில்லை என்றும், நேர்மையாகச் செயல்பட்டு வரும் தன் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய்க்குற்றச்சாட்டுக் கூறப்படுவதாகவும் சுரப்பா தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் உரிய ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராக வேண்டும் எனப் பதிவாளர் கருணாமூர்த்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.