நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.
செம்பரம்பாக்கம் ஏரியில் மாலை நிலவரப்படி, 22 புள்ளி 37 அடி நீர் இருப்பு இருந்தது. விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்க, ஏரியில் இருந்து ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில் தற்போது 20 புள்ளி17 அடி நீர் இருப்பு உள்ளது . வினாடிக்கு 750 கனஅடி நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது.
35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 34 புள்ளி 01 அடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 3ஆயிரத்து 800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்க உபரி நீர் முழுவதும் 6 மதகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள கண்ணண் கோட்டை நீர்த்தேக்கத்தில் 36 புள்ளி 61 அடியில் தற்போது 23 புள்ளி 83 அடி நீர் இருப்பு உள்ளது.