பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட நான்கு மாணவர்களிடம் முறையான இருப்பிட சான்றுக்கான ஆவணம் இல்லாததால் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
அந்த மாணவர்கள், தாசில்தாரின் இறுதி கையெழுத்திட்ட சான்றிதழை கொடுக்காமல், கிராம நிர்வாக அலுவலரிடம் இருப்பிடத்துக்கான சான்றிதழை பெற்றுள்ளனர்.
அதன் காரணமாக சான்றிதழ்களை சரிபார்த்த 5 பேர் கொண்ட குழுவினரின் சட்ட ஆலோசனைப் படி 4 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் போலியான சான்றிதழ் அல்லது முறைகேடு செய்திருந்தால் மட்டுமே சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்தார்.