தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுமாறு, தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பொள்ளாச்சி மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த முடியாமல் கேட்டரிங் பணிக்குச் சென்றுள்ளதாக வெளியான செய்தியை அவர் நினைவூட்டி உள்ளார், திருவண்ணாமலை மாணவிகள் பிரித்திஷா, விஜய லட்சுமி, பவானி ஆகிய மூவரும் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் மு.க. ஸ்டாலின்சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடங்களை ஒதுக்கி கொடுத்தால் ஏற்கனவே அறிவித்தபடி, கல்விக் கட்டணங்களை செலுத்த திமுக தயாராக இருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.