சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட 1000 தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
நீச்சல் மற்றும் கயிறு ஏறுதலில் தகுதி வாய்ந்த பிரேத்யேக மீட்பு படை வீரர்கள் எந்தவித அவசரகாலத்தையும் சமாளிக்கும் விதத்தில் எழும்பூர் மற்றும் தாம்பரம் பகுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாக, சென்னை தீயணைப்பு துறை இணை ஆணையர் பிரியா தெரிவித்தார்.