அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தனி அலுவலகம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துணைவேந்தர் சுரப்பா மீது பலர் தொலைபேசி வாயிலாக புகார் அளித்து வந்த நிலையில், முறையான அலுவலகம், பணியாட்கள் இல்லாததால் விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், உயர்கல்வித்துறை துணைச் செயலாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. உள்ளிட்ட 5 பேர் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாகவும், 8 பேர் பணியாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள பொதிகை இல்லம், கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கான அலுவலகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளை முதல் விசாரணை தொடங்கும் என கூறப்படுகிறது.