அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது புதிய புகார்கள் வந்து கொண்டிருப்பதாக விசாரணை அதிகாரியும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டார்.
விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், சுரப்பா மீது புதிய புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட பலர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு புகார் அளிப்பதாகவும் கலையரசன் தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ புகார்களை பெற்றபிறகு அதன் மீதான விசாரணை நடைபெறும் என்றும் கலையரசன் கூறியுள்ளார்.