வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் தொழில்புரிவதற்கான தேர்வு (FMGE) வினாத்தாளை மதிப்பீடு செய்ய சுதந்திரமான நிபுணர் குழுவை அமைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தேர்வில் தோல்வியடைந்த 17 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த விவகாரங்களில் நிபுணர் குழு எடுக்கும் முடிவுகளில் தலையிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை ஏற்கனவே 20 நிபுணர்கள் கொண்ட குழு 4 நாட்களாக ஆய்வு செய்து, எந்த தவறும் நடக்கவில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாலும், நிபுணர் குழுவை அமைக்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.