தீபாவளியன்று சென்னையில் காற்று மற்றும் ஒலி மாசின் காரணிகளின் அளவில் குறிப்பிடத் தக்க அளவுக்கு எந்த மாற்றமும் இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை ஆகிய இடங்களில் காற்றுத் தர ஆய்வும், ஒலிமாசு கண்டறியும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
5 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களிலும் நுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டே இருந்தது.
திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை கண்காணிப்பு நிலையங்களில் மிதக்கும் நுண்துகள்கள் நிர்ணயிக்கப்பட்டதைவிடச் சற்றே கூடுதலாக இருந்தது. அனைத்துக் காற்றுத்தரக் கண்காணிப்பு நிலையங்களிலும் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியன நிர்ணயிக்கப்பட்டதைவிடக் குறைந்தே காணப்பட்டன.
வளிமண்டல ஒலிமாசின் அளவு தீபாவளிக்கு முன் 54 டெசிபல் முதல் 69 டெசிபல் ஆகவும், தீபாவளியன்று 71 டெசிபல் முதல் 78 டெசிபல் வரையும் இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.