சென்னையில், மோகன்லால் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான 814 கிலோ தங்கம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை நகைக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ தங்க நகைகளை முடக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில், 2018 - 19 ஆம் ஆண்டில் 102 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளதையும், தொழில்சாரா முதலீட்டில் ஈடு பட்டு, லாபத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்திருந்ததையும் கண்டு பிடித்தனர்.
கணக்கில் வராத 500 கோடி ரூபாய் மதிப்பலான சொத்து ஆவணங்களும் சோதனையில் சிக்கியதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை, 150 கோடி ரூபாய் கணக்கில் வராத வருவாய் ஈட்டியதை நிறுவனம் ஒத்துக் கொண்டதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.