செல்போன் திருட வந்த இடத்தில் தனது செல்போனை திருடன் ஒருவன் தவறவிட்டுச் சென்ற சம்பவம் சென்னையில் அரங்கேறி இருக்கிறது.
ஜாபர்கான்பேட்டையில் ஹோட்டல் ஊழியர்கள் 5 பேர் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். காற்று வாங்குவதற்காக இரவு கதவை திறந்துவைத்துவிட்டு தூங்கிய நிலையில், அதிகாலை வீட்டில் நுழைந்த திருடர்கள் 2 பேர், உள்ளேயிருந்த 4 செல்போன்களை திருடி உள்ளனர்.
சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் கண் விழிக்கவே, திருடிய செல்போன்களோடு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய இருவரில் ஒருவன் தனது செல்போனை அங்கு தவறவிட்டுள்ளான்.
செல்போன் போலீசார் கைக்கு சென்றது தெரியாமல், அந்த எண்ணுக்கு அழைத்த மற்றொரு திருடன், “ஆகாஷ் எங்கடா இருக்கே, நான் விஷ்ணு பேசுகிறேன்” எனக் கூறியுள்ளான். திருடர்கள் இருவரின் பெயர்களும் தெரியவந்த குஷியில், பழைய குற்றவாளிகளின் பெயர்களைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.