சென்னையில் நகைப்பட்டறையில் இருந்து 112 சவரன் எடையுள்ள தங்கத்தை உருக்கி கம்பி போல் மாற்றி உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு தப்பியோடிய ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும், செயின் கிராஃப்ட் நகைப்பட்டறையில், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பசூரில் ஷேக், ரீடியோ கமர்க்கர், சர்புந்த் சர்தார், சர்புந்த் மண்டல் ஆகிய 4 பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
அண்மையில் இவர்களிடம் தரப்பட்ட 900 கிராம் தங்கத்தை உருக்கி, நகைகளை செய்யாமல், அதனை கம்பிபோல் மாற்றி, உடல்முழுவதும் சுற்றிக் கொண்டு, இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு, நால்வரையும், கிண்டி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.