தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவு திடலில் முதற்கட்டமாக 20 கடைகள் திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு பட்டாசு விற்பனை காலத்தை 20 நாளில் இருந்து 10 நாட்களாகவும், கடைகளின் எண்ணிக்கையை 70லிருந்து 40 ஆகவும் தமிழக அரசு குறைத்துள்ளது.
இந்த நிலையில், தீவுத்திடலில் முதற்கட்டமாக இன்று 20 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைகளும் 6 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டு, பட்டாசு வாங்க வருவோர் கிருமிநாசினி வழங்கப்பட்டு, கடைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக பைக்குகளுக்கு 20 ரூபாயும் கார்களுக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.