விபத்தில் சிக்கிய கணவரைப் பார்க்கச் சென்ற பெண் செவிலியர் சென்னையில் மாநகரப் பேருந்து மோதி உயிரிழந்தார். வேலூரை சேர்ந்த மிஸ்பா மரியம் மாதவரத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் கணவர் அப்துல் ஹையாஸ் நேற்று வேலூரில் வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அங்கு செல்ல, மிஸ்பா மரியம் தனது இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அயனாவரம் - கொன்னூர் நெடுஞ்சாலையில் பின்னால் வந்த மாநகரப் பேருந்து மோதியதில், செவிலியர் மிஸ்பா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜைக் கைது செய்தனர். அந்தப் பகுதியில் விபத்தைத் தவிர்க்க வேகத்தடை அமைக்கக் கோரிப் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.