பள்ளிக் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில், 62 சதவீத பள்ளிக் கட்டிடங்களில் உரிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு பாடம் நடத்த ஏதுவாக, நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சட்ட விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், டிசம்பர் 23ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.