சென்னையில் பல் முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பல் முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக சென்னை துறைமுகம் அருகே நிலம் ஒதுக்க தமிழக அரசு முன் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கூடுவாஞ்சேரியில் இருந்து செட்டிபுலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 45- யை எட்டு வழி சாலையாக விரிவுபடுத்தவும், மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையை விரிவுபடுத்தவும் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.