சென்னையில் பண்ணை பசுமைக் கடையில் கிலோ 45 ரூபாய்க்கு பெரிய வெங்காய விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
வடமாநிலங்களில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்து பெரிய வெங்காயம் அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில், இதை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடங்கி வைத்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, விலை தொடர்ந்து அதிகரித்தால், நியாய விலை கடைகள் மூலம் பெரிய வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.