ஐஎன்எஸ் சென்னை போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் சென்று 290 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது அந்த ஏவுகணை. அதன் தாக்குதல் இலக்கை 450 கிலோ மீட்டர் தூரமாக அதிகரிப்பது குறித்து டிஆர்டிஓ கடந்த மாதம் சோதனை நடத்தியது.
இதேபோல் சுகோய் விமானத்திலிருந்தும் கடந்த ஆண்டு பரிசோதித்தது. இந்நிலையில் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் சென்னை போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை டிஆர்டிஓ இன்று சோதித்துள்ளது.
அந்த ஏவுகணை அரேபிக் கடலில் இருந்த இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கியதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.