கிரெடிட் கார்டு மூலம் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை, சிசிடிவி கேமராக்கள், செல்போன் எண்ணை ஆய்வு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவர் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், எச்டிஎப்சி வங்கியில் இருந்து பேசுவதாக செல்போனில் தொடர்பு கொண்ட நபர் தனது கிரெடிட் கார்டை மாற்றித் தருவதாக கூறியதை நம்பி, 2 முறை ஓடிபி எண்ணை தெரிவித்ததால், 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மோசடி செய்து விட்டதாக தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் வளசரவாக்கம் தனியார் வங்கி கிளைக்கு மோசடி நபர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பகுதியில் இருந்த 25 சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும், இருசக்கர வாகன எண்ணை வைத்து கோயம்பேட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்தனர்.