துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
எமிரேட் விமானத்தில் வந்த 7 பேரை சந்தேகத்தின் பேரில் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரித்த போது, தங்கத்தை பசை வடிவில் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 430 கிராம் எடையிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று செவ்வாய்கிழமை இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த 7 பயணிகளிடம் இருந்து ஒரு கிலோ 390 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருவதாக சுங்கத்துறை அறிவித்துள்ளது.