சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் ஜோதிராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், செப்டம்பர் 7 ம்தேதி முதல் இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வுகள் மட்டும் நேரடி விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 5ம் தேதி முதல் மேலும் 21 நீதிபதிகள் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காலையில் ரிட் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகளும், பிற்பகல் மேல் முறையீட்டு வழக்குகளும், உரிமையியல் வழக்குகளும் விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வழக்குகள் நேரடியாகவோ, காணொளி காட்சி மூலமோ விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது