ரேஷன் கடைகளில் வருகிற ஒன்றாம்தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் கைரேகைப் பதிவின் மூலம் வழங்குவதற்கு பழைய விற்பனை முனைய இயந்திரத்தை மாற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் வரும் 30ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய தேதிகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும்.