சென்னை சூளைமேட்டில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் 2வது தளத்தில் வசித்து வந்த நாராயணன் என்பவர், ஊரடங்கால் வருமானமின்றி கடந்த 5 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சந்திரமோகன் வாடகைக் கேட்க சென்றபோது, மதுபோதையில் இருந்த நாராயணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளரின் மகன் சதீஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யா ஆகியோரும் மேலே சென்றுள்ளனர். அப்போது, திடீரென வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்த நாராயணன் மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளான்.
இதில், சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நாராயணனை போலீசார் கைது செய்துள்ளனர்.