சென்னை மாநகரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் வழிப்பறி கொள்ளையர்களால் திருடப்பட்ட சுமார் ஆயிரத்து 200 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
புதுப்பேட் டை- ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, செல்போன்களை ஒப்படைத்த மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், மீட்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
"பல்லு போனா சொல்லு போச்சு" என்பது பழமொழி - ஆனால், இப்பொழுது, "செல்லு போனா வாழ்க்கையே போச்சு " என்பது புதுமொழி என நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன்நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மீண்டும் செல்போன் கிடைத்ததால் மகிழ்ச்சி தெரிவித்த கல்லூரி மாணவி ஷைனி ஏஞ்சலின், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடி யாமல் தவித்த தமக்கு, மாநகர காவல் துறையினர் சரியான நேரத்தில் உதவி உள்ளதாக நன்றி தெரிவித்தார்.