செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

அந்தரங்க படத்தை வெளியிட்டு மனைவிக்கு மிரட்டல்: சைக்கோ கணவர் கைது

Sep 18, 2020 01:11:17 PM

சென்னை வில்லிவாக்கத்தில் மனைவியின் அந்தரங்க (நிர்வாண) படத்தை
சமூகவலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பகிர்ந்து, 10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டியதாக சைக்கோ கணவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லிவாக்கத்தை சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர் கடந்த 2010- ம் ஆண்டு திருமணமாகி, கணவர் கொடுமை தாங்க முடியாமல் பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது அவருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிப்புரிந்த திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதிக்கும் 2015ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்த நிலையில், வரதட்சனையாக 25 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் , ஏசி உள்ளீட்ட சீர் வரிசை பொருட்களை பெண் வீட்டார் வழங்கியுள்ளனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் அயனாவரத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், விஜயபாரதி சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனவும், அதற்கு 10 லட்ச ரூபாய் வேண்டும் எனவும் கேட்டு துன்புறுத்த தொடங்கியதாகவும், இதனால் அந்த பெண் கடந்த ஜூலை மாதம் வில்லிவாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகும் விடாமல் தொலைபேசி மூலம் பணம் கேட்டு விஜயபாரதி மிரட்டியதாகவும், உச்சக்கட்டமாக கடந்த மாதம் 6-ஆம் தேதி நேரில் வந்து கடுமையாக தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தலைமை செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த விஜயபாரதி, புகாரை வாபஸ் பெற்று, 10 லட்சம் ரூபாய் பணமும் தராவிட்டால் அந்தரங்க படத்தை வெளியிடுவேன் என மிரட்டியதோடு, மனைவியின் முகநூல் பக்கத்தில் அவரே பதிவிட்டது போல, நிர்வாண படத்தை வெளியிட்டதாகவும், பிறகு மனைவியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அதே படத்தை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த விஜயபாரதியின் மனைவி, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றநிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமாகி திரும்பினார்.

இதையடுத்து விஜயபாரதி மீது அவரது மனைவியின் குடும்பத்தினர் புகார் கொடுக்கவே, வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இதையடுத்து விஜயபாரதியை விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் வெளியூரில் இருப்பதாக விஜயபாரதி ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து செல்போன் எண் சிக்னலை வைத்து கண்டுபிடித்து அயனாவரத்தில் விஜயபாரதி பதுங்கியிருந்ததை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர்.

வரதட்சனை கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கான தண்டனையை தமிழக அரசு அதிகரித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, வரதட்சனைக்காக மனைவியின் நிர்வாண படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைக்கோ கணவரான விஜயபாரதிக்கும் உரிய தண்டனை கிடைக்கும் என காவல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Advertisement
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்
சென்னை டி.பி சத்திரத்தில் 5 பைக்குகளுக்கு தீ வைத்தவர் கைது
திருவான்மியூர் கடற்கரையில் 'நீர்மிகு பசுமையான சென்னை' இசை வீதி விழா
மேயராக இருந்தபோது நிலம் அபகரிப்பு வழக்கு - ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மனு..
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் அட்டூழியம் கண்மூடித்தனமாக வெட்டியதில் 5 பேர் காயம்
ஆவடி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டித் தள்ளிய மாடுகள்
சர்வதேச திரைப்பட விழா சிறந்த படமாக அமரன் தேர்வு.. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது
காசிமா... நீ சூப்பர்மா கேரம் சாம்பியனான ஆட்டோ ஓட்டுனர் மகள்..! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
மெரினா கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு உணவுத் திருவிழா நாளை தொடக்கம்..

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement