சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில், ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேசனுக்கு அறிஞர் அண்ணா பெயரும், சென்ட்ரல் ரயில் நிரையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதா பெயரும் சூட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறியுள்ள மனுதாரர், தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட வழங்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.