தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க மறுத்தால் சட்டரீதியான பிரச்சனையை சந்திக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
2006, 2007, 2008ஆம் ஆண்டுகளில் எத்தனை டிஎன்பிஎஸ்சி பணியிடங்கள் காலியாக இருந்தன? அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எத்தனை பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன? என்பன உள்ளிட்ட விவரங்களை மனுதாரருக்கு வழங்க மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த தகவல்களை வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனக்கூறி, உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடர்ந்தது. இது போன்ற தகவல்களை வழங்க மறுக்கும் பொது தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்க தகுதி இல்லை என தெரிவித்த நீதிபதி, மனுதாரர் கோரிய தகவல்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தகவல்களை வழங்க மறுத்த பொது தகவல் அதிகாரிகள், இன்னும் பதவியில் நீடிக்கிறார்களா? இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். தகவல்களை வழங்க மறுத்தால் சட்டரீதியான பிரச்சனையை சந்திக்க நேரிடும் என சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.