சென்னை பட்டினப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின், கார் பார்க்கிங் வளாகத்தில் கல்லூரி மாணவி ஓட்டி வந்த ஆடி கார் மோதியதில் உறங்கி கொண்டிருந்த காவலாளி பலியானார்.
68 வயதான காவலாளி சிவப்பிரகாசம், கார் நிறுத்தும் வளாகத்தில் கார் வரும் வழியில் நேற்றிரவு மது போதையில் உறங்கியதாக கூறப்படுகிறது. அந்தக் குடியிருப்பில் வசித்து வரும் தொழிலதிபர் கிட்டு என்கிற பழனியப்பனின் மகள் அபர்ணா, பாதையில் காவலாளி சிவப்பிரகாசம் படுத்திருப்பதை கவனிக்காமல் ஆடி காரை ஓட்டி வந்த போது அவர் மீது கார் ஏறி இறங்கியது.
காரின் கீழே ஏதோ தென்படுவதை உணர்ந்த அபர்னா சக்கரத்தின் ஓரம் கிடந்த போர்வையை அகற்றிவிட்டு, சிவப்பிரகாசம் சிக்கிக் கொண்டிருப்பதை கவனிக்காமல் காரை நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் காவலாளியை தேடிய போது தான் அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இந்த விபத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து மாணவியை போலீசார் கைது செய்தனர்.