பர்வீன் டிராவல்ஸ் உரிமையாளரின் மகள் பதிவுத் திருமணம் செய்த நிலையில், பெற்றோர் தங்களைப் பிரிக்க முயல்வதாகக் கூறிக் காவல்துறையினரிடம் பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளார்.
பர்வீன் டிராவல்ஸ் உரிமையாளர் அப்சலின் மகள் சாலியாவும், கரீமுதீன் என்பவரும் கடந்த மார்ச் மாதம் வீட்டுக்குத் தெரியாமல் வடசென்னை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் இருந்துள்ளனர்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சாலியா கரீமுதீன் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், சாலியாவைப் பிரித்து அழைத்துச் செல்ல அவர் தந்தை அப்சல் முயல்வதாகவும், நூற்றுக்கு மேற்பட்ட அடியாட்களுடன் வந்து மிரட்டுவதாகவும் கூறிச் சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் கரீமுதீன் புகார் அளித்துள்ளார்.