வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் என பிரபல தொழில் அதிபர் ஏ.சி முத்தையாவின் புகைப்படத்துடன் அவரது அலுவலகத்தில் ஐடிபிஐ வங்கி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
அண்ணா சாலையில் உள்ள ஃபர்ஸ்ட் லீசிங் (first leasing company of india ltd) நிறுவனத்துக்கு எதிராக ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிகள் அளித்த புகாரின்பேரில், அந்நிறுவன இயக்குனர் ஏ. சி முத்தையா, புரமோட்டர் இயக்குனர் (promoter director) பருக் இராணி உள்ளிட்டோர் மீது 508 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஏசி முத்தையா பெயர் இடம்பெற்றுள்ளதால் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர் என அவரது அலுவலகத்தில் ஐடிபிஐ நோட்டிஸ் ஒட்டியுள்ளது.