நாளை முதல் சென்னை மாவட்ட எல்லைக்குள் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள 39 பணி மனைகளில், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பேருந்துகளை தயார் செய்வதிலும் சுத்தம் செய்வதிலும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பேருந்துகளில் எஞ்சின்களை சோதித்து, குறைபாடுகள் இருந்தால் அவை சரிசெய்யப்பட்டு, பழுதுநீக்கி, கிருமிநாசினி தெளித்து பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடத்தப்படுகிறது.